தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் கருத்து
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சியின் அரசியல் குழுவே இறுதி முடிவு எடுக்கும் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (16.11.2024) சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு முடிவும் கட்சியால் எடுக்கப்படவில்லலை. இதனால் கட்சியின் அரசியல் குழு கூடி ஒரு முடிவு எடுக்கும் என நான் நம்புகின்றேன்.
கட்சியின் அரசியல் குழு
அதேநேரத்தில் இப்போது வரையில் யாரையும் யாரும் தீர்மானித்ததாகவும் எனக்குத் தெரியவும் இல்லை. எனினும், தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் வேறு எவரும் யாருடனேயும் ஏதும் பேசியிருக்கின்றார்களோ என்றும் தெரியவில்லை.
ஆனாலும், கட்சியைப் பொறுத்த வரையில் இதுவரையில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆகவே, கட்சியின் அரசியல் குழு கூடி இந்த நியமனம் தொடர்பில் நிச்சயம் ஒரு முடிவு எடுக்கும்” என்றார்.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
