உலக வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினால் சிக்கல்: சிவநேசத்துரை சந்திரகாந்தன்
உலக வங்கியின் ஊடாக கிடைக்கப்பெற்றிருக்கின்ற விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழலும் பிரச்சினைகளும் வந்திருப்பதாக உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் கிடைக்க பட்டிருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு(Batticaloa) - மன்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களுக்கான வாழ்வாதார பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(17.06.2024)மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மக்களின் தேவை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2022 ஆம் ஆண்டு மிகவும் ஒரு மோசமான ஆண்டாக காணப்பட்டதுடன் ஒப்பிடுகின்ற போது 2023 ஆம் ஆண்டு ஓரளவு மாற்றத்திற்கு வந்தது.
2024 ஆம் ஆண்டு ஓரளவு முன்னேரிய ஒரு நாட்டிலே நாங்கள் வாழக்கூடிய சூழலில் ஏற்பட்டிருக்கின்றது.
மலசல கூடங்களுக்கு நிதி ஒதுக்குவது என்பது ஒரு நல்ல ஒரு விடயமாக நான் பார்க்கின்றேன்.
இது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய பிரச்சினை சில இடங்களுக்கு செல்லுகின்ற போது இதற்கெல்லாம் எவ்வாறு தீர்வு கொடுப்பது என்பது தெரியாது.
ஏனென்றால் ஆயிரக்கணக்கான விளிம்பு நிலை மக்கள் இன்னமும் மிக மோசமான சுகாதார நடைமுறைகளில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தங்களுடைய நாளாந்த மலசல கூட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்ற கடந்த காலங்களை போன்று மறைவிடங்கள் கூட இல்லாத நிலையில் மிக துன்பப்படுகின்ற போது கவலையாக இருக்கின்றது.
அதற்கு பலவிதமான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவைப்பாடுகளும் எழுந்திருக்கின்றது.
எனினும், சில முயற்சிகள் எடுத்தும் அதில் தோற்றும் இருக்கின்றோம்.
நாங்கள் ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக வர வேண்டுமாக இருந்தால் அனைவருக்கும் இந்த திட்டங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதற்கும் எதிர்காலம் நல்ல வழிகளை காட்டும் என நம்புகின்றேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |