பொலிஸாருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள வெலிகம துப்பாக்கி சூடு!
கடந்த வருடம் வெலிகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 31ம் திகதி கொழும்பில் இருந்து சென்றிருந்த குற்றத் தடுப்பு பொலிஸார், பாதாள உலகக் கும்பலின் புள்ளியொருவரை தேடும் போர்வையில் வெலிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
சிவில் உடையில் வந்த குறித்த குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெலிகம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, கண்காணிப்பு பொலிஸார் அவ்விடத்துக்கு வருகை தந்து சிவில் உடையில் நின்ற குழுவினர் பொலிஸார் என்பதையறியாமல் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் பலி
இந்தச் சம்பவத்தில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்து, இன்னொரு பொலிஸ் அதிகாரி காயமுற்றிருந்தார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முன்னால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியின்போது 2.5 மில்லியன் நட்டஈடும், அன்றைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் சார்பில் தலா 1.7 மில்லியன் நட்டஈடும் (மொத்தமாக 5.9 மில்லியன் ரூபா) வழங்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த சம்பவம் அரசியல்வாதியொருவரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு என்பதுடன், அதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பொலிஸார் போலி இலக்கத் தகடு கொண்ட வாகனம் ஒன்றில் வெலிகம சென்றிருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் மற்றும் அவர்களுக்கு உதவியாக செயற்பட்ட உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
இதன் காரணமாக பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலக்கத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 4 மணி நேரம் முன்

ஹர்திக்கின் படையை கடைசி ஓவரில் முடித்துவிட்ட சகோதரர் க்ருனால் பாண்ட்யா! மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய RCB News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri
