ஜனாதிபதியின் கோரிக்கையால் இலங்கைக்கு ஏற்பட போகும் நிலைமை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கோரிக்கை காரணமாக இலங்கையை மீண்டும் சர்வதேச கடன் தரப்படுத்தலில் கீழ் நோக்கி கொண்டு செல்லக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka)தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த மேலதிக காலத்தை வழங்குமாறு, தன்னை சந்தித்த சீன வெளிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கோரிக்கையானது, இலங்கை கடனை திரும்ப செலுத்த முடியாத நாடாக மாறியுள்ளது என சர்வதேச நிதி சந்தைக்கு வழங்கிய மிக ஆபத்தான சமிக்ஞையாகும் எனவும் சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக சர்வதேச நிதி சந்தையான இலங்கையை மேலும் கீழ் நோக்கி தரப்படுத்த நடவடிக்கை எடுக்கும் எனவும் முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தள கணக்கில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri