ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் மரணம் - தென்னிலங்கையை உலுக்கிய சம்பவம்
எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் வீடொன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
துசித சம்பத் பண்டார என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
காலி பிரதேசத்தில் பணிபுரியும் இடத்திலிருந்து எப்பாவல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அவர் இன்று உயிரை மாய்த்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள் மரணம்
தனது சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் இதற்கு முன்னர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி குடும்பத்தில் ஐந்தாவது நபராக இந்த இளைஞன் இன்று உயிரிழந்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர் அவரது சகோதரன் மற்றும் சகோதரி ஒருவர் தலாவ பிரதேசத்தில் ரயிலில் பாய்ந்து உயிரிழந்ததாகவும் மற்றுமொரு சகோதரன் தோட்டத்திலுள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இளைஞனின் விபரீத முடிவு
மேலும், இந்த இளைஞன் தூக்கிட்டுத் உயிரை மாய்த்துக் கொண்ட அதே அறையில் அவரது மற்றொரு சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதன்படி, அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஏழு சகோதர சகோதரிகளில் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
