இலங்கையின் முன்னாள் புலனாய்வு தலைவர் குறித்து நீதிமன்றுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் புலனாய்வு தலைவர் சிசிர மெண்டிஸ் சாட்சியாக அழைக்கப்படமாட்டார் என்று கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் சார்பில் பிரதி மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா இதனை இன்று மன்றில் அறிவித்தார்.
ஏற்கனவே இந்த வழக்கில் சாட்சியாளராக சிசிர மெண்டிஸ் பெயரிடப்பட்டிருந்த போதிலும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார் என்று அவர் குறிப்பிட்டார்
இந்தநிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவும் முன்னாள் பொலிஸ் அதிபர் பூஜித் ஜெயசுந்தரவும் பதவி வகித்தநிலையில் தாக்குதல்களை தடுக்க தவறிய குற்றத்துக்காக சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.