சினோவாக் கோவிட் தடுப்பூசி! நடத்தப்படவுள்ள விசாரணை
இலங்கையில் சினோவாக் கோவிட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர இணக்கம் ஒன்றுக்கு வரத் தவறியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
அதற்காக நிமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையகுழு இந்த விசாரணையை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ள தேசிய சுகாதார ஒழுங்கு முறை ஆணைக்குழுவின் தலைவர் ரசித விஜேவந்த, இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாடு குறித்து ஒரு முடிவை எட்ட முடியாமல் போனமைக்கான காரணங்களை விசாரிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் உறுதிப்பாட்டுக்கு மத்தியிலும் நிபுணர்களின் இந்த நிலைப்பாட்டுக்கு பின்னால் உள்ள சரியான காரணங்களை தாம் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
உலக சுகாதார அமைப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த தடுப்பூசி நோய்த்தொற்றுகள், கடுமையான நோய் மற்றும் இறப்புகளைக் குறைக்கிறது என்று அவர் கூறினார்.
இதேவேளை இந்த தடுப்பூசி பீய்ஜிங்கை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனமான சினோவாக்கினால் தயாரிக்கப்படுகிறது. சினோவாக் தடுப்பூசி 83.5 சதவிகிதம் செயல்திறனைக் கொண்டுள்ளது என்று நீண்ட காலமாக இயங்கும் தெ "லான்செட்" என்ற மருத்துவ இதழ் கூறுகிறது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
