சினோபெக் நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டம் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என தகவல்
சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் 3.7 பில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டம் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடாக, இது கருதப்படுகின்ற நிலையில், ஆறு மாதங்கள் கடந்த பிறகும் கூட இன்னும், அது இறுதிப்படுத்தப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
வேறுபாடுகள்
உள்ளூர் சந்தைப் பங்கு கூறுகளில், இலங்கை அரசாங்கத்திற்கும், குறித்த நிறுவனத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் காரணமாகவே, இது இன்னும் சாத்தியமாகவில்லை என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பீய்ஜிங்குக்கு, சென்ற போது, இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த திட்டத்தின்படி, 3.7 பில்லியன் டொலர் முதலீட்டின் கீழ், 200,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட ஒரு அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பாந்தோட்டையில் கட்டப்பட உள்ளது.
தடையற்ற அணுகல்
சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தியில் கணிசமான பகுதி ஏற்றுமதிக்காக திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், சினோபெக் அதன் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களுக்கான உள்ளூர் சந்தைக்கு, தடையற்ற அணுகலை விரும்புகிறது.

இருந்தபோதும், இலங்கை அரசாங்கம் அதற்கு 20 சதவீத வரம்பை நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவே, சினோபெக்கின் திட்டத்தை, இலங்கையில் நடைமுறைப்படுத்த தடையாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த விடயத்தை, விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அரச அதிகாரி ஒருவர், ஆங்கில இதழொன்றிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri