கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்த பொதியை பரிசோதித்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி
கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பொதியை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மீட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ஸ்பீக்கரில் மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருகோட தெரிவித்தார்.
அதிவேக கூரியர் சேவை மூலம் நாட்டிற்கு வந்த போதைப்பொருள் அடங்கிய ஸ்பீக்கரில், எந்த ஒரு உரிமையாளரின் பெயரும் பதிவு செய்யப்படவில்லை என சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
சுங்க அதிகாரி
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் ஜனவரி 9 ஆம் திகதி இந்த ஸ்பீக்கரை கைப்பற்றியது.

நீண்ட காலமாக இதனை பெற்றுக் கொள்ள ஒருவரும் முன்வராத நிலையில் கடந்த 25 ஆம் திகதி சுங்க அதிகாரிகளால் அது பரிசோதிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள்
ஸ்பீக்கரைத் திறந்து பரிசோதித்த போது, உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் அடங்கிய 17 பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் 862 கிராம் குஷ் மற்றும் 4,014 கிராம் ஹஷிஷ் அடங்கிய 09 பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மேலும் விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam