"இசைப்பிரியா - கிருசாந்திக்கு நடந்த கொடூரத்தை புரிந்து கொள்வார்களா சிங்கள தாய்மார்கள்" (Video)
போராட்டம் என்பது ஒன்று தான் அதன் வடிவங்கள் தான் வேறு. வடக்கு கிழக்கு மக்களின் உணர்வுகளை சிங்கள மக்கள் உணரும் தருணமாகவே இதை பார்க்க வேண்டும் என புலனாய்வு செய்தியாளர் எம்.எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,"காலி முகத்திடலில் பெண்களை ராணுவம் தாக்கியதை சிங்கள தாய்மார்கள் அவர்களை அழைத்து வந்து மக்களுக்கு காட்டுகிறார்கள். இதே கொடுமைகளை தான் 30 ஆண்டு காலமாக வடக்கு கிழக்கு பெண்களுக்கு இந்த ராணுவமும் அரசாங்கமும் செய்தது. அந்த வழிகளை உணரும் தருணமாகவே இது அமைய வேண்டும் என எமது ஆதங்கத்தை தான் நாம் சொல்ல முடியும்.
ரணில் ஆட்சிக்கு வருகைதந்ததும் இப்படி ஒரு அடக்கு முறையில் ஈடுபடுவார் என்பது தெரிந்த விடயம் தான்.அவர் அம்பி போன்று இருந்து இப்போது அந்நியனாக மாறியுள்ளார்.
காலி முகத்திடல் தாக்குதல் குறித்து மேற்குலக நாடுகளின் கருத்துக்களுக்கு இவர் காரசாரமாக பதில் அளித்துள்ளார். அவர் செய்தது சரி என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த நாட்டின் இராணுவத்தினர் மிக மோசமானவர்கள் என்பது இந்த தாக்குதல் ஊடக மீண்டும் நிரூபிக்கபட்டுள்ளது”என கூறியுள்ளார்.