நாட்டில் பியர் விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் பியர் விற்பனையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில வகை பியர் உற்பத்திகள் காலாவதியாகும் காலத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பியர் வகைகளின் விற்பனை சுமார் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

உள்நாட்டு உற்பத்திகள் ஏற்றுமதி
உள்நாட்டு மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தற்பொழுது மதுபான ஏற்றுமதியினால் 22 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெறுவதாகவும் இதனை 30 - 35 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதனோல் விலை அதிகரித்துச் சென்ற நிலையில் தற்பொழுது கிரமமாக எதனோல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
மதுவரித் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri