அரசியல்வாதிகளே மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துகின்றனர்: மல்வத்து மகா நாயக்கர்
ஒரு சில அரசியல்வாதிகளே சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக மல்வத்து மகாநாயக்க தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் நேற்று (18.03.2023) கண்டியில் மல்வத்து மகா நாயக்க தேரர் திப்படுவாவே சுமங்கல தேரரைச் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இதன்போது அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு வழங்கும் உதவிகள் குறித்து மகாநாயக்க தேரர் நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் ஏற்படும் பிளவுகள்
இலங்கையில் நீண்ட காலமாக சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் நல்லுறவுடன் இருப்பதாகவும், ரிதீகம மற்றும் கண்டி முஸ்லிம் பள்ளிவாசல்கள் பௌத்த விகாரைகளின் காணிகளிலேயே அமைக்கப்பட்டிருப்பதாகவும் மல்வத்து மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒருசில அரசியல்வாதிகளே பிளவுகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
