சிங்கள நடிகை அனுஷா தமயந்தி குற்றப்புலனாய்வு துறையில் முறைப்பாடு
சிங்கள நடிகை அனுஷா தமயந்தி, சமூக ஊடக தளத்தில் தனக்கு அவமானம் ஏற்படுத்தப்படுகின்றமை தொடர்பாக குற்றப்புலனாய்வு துறையில் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் தகவல் வழங்கிய அவர், தனக்கு எதிராக சமூக ஊடகங்கள் மூலம் மீண்டும் மீண்டும் நடத்தப்படும் சேறு பிரசாரத்தை தாங்க முடியாததால் அதை சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் முறையிட முடிவு செய்தாக கூறினார்.
தாம், பேஸ்புக்கில் அவதூறாகப் பேசப்படுவதாக அவர் கூறினார்.
ராஜபக்ஷ முகாமுக்காக நான் கடுமையாகப் போராடியதன் காரணமாகவே இவ்வாறு மேற்கொள்ளப்படுவதாக தாம் நினைப்பதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சர் சரத் வீரசேகரையும் சேர்த்து தனக்கு எதிராக சேறு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
தாம் ஒரு பொருத்தமற்ற வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவமதிக்கப்பட்டதாகவும், "வலனா ஊழல் தடுப்புப் படை எனது வீட்டைச் சோதனையிட்ட பின்னர், தாம் அமைச்சர் வீரசேகரவை தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்கள் மூலம் பெண்கள் துன்புறுத்தப்படுவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஒத்த குற்றமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri