சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை! ஜனாதிபதி பிறப்பித்துள்ள பணிப்புரை
சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தற்போதுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக இந்த உடன்படிக்கையின் அமுலாக்கம் 2018ஆம் ஆண்டு பலதரப்புக்களின்
எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.