சிங்கப்பூர் சட்டங்களை இலங்கையில் அறிமுகப்படுத்த வேண்டும் - சஜித்
முன்னைய ஆட்சியின் உறுப்பினராக இருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போனதற்கு அவர்கள் பொறுப்பை ஏற்கத்தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான உண்மையான வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்து செயற்பட்ட உண்மையான குற்றவாளிகள் தற்சமயம் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள் என்பது மக்களின் பார்வையாகும்.
பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடாகும்.
இது நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் மூலம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.சிங்கப்பூரில் ஏன் பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் இல்லை என்பதை இலங்கை கண்டறிய வேண்டும். அங்குள்ள சட்டங்களை இலங்கையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று சஜித் வலியுறுத்தியுள்ளார்.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
