பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கிளிநொச்சியில் கையெழுத்திடும் போராட்டம் (VIDEO)
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டமொன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வானது தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தனராஜ் தலைமையில் கிளிநொச்சி சேவைச் சந்தை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் வேழமாலிகிதன் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் தாக்கம் தொடர்பில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri