உலுக்குளம் காட்டுப்பகுதியில் கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை
வவுனியா, உலுக்குளம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று பொலிசாரால் முற்றுகையிப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, உலுக்குளம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, செட்டிகுளம் பகுதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் செனவிரட்ன வீரக்கோன் அவர்கள் தலைமையில், உலுக்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படும் நான்கு பெரல்கள், 100 லீற்றர் கோடா, வயர்கள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணையின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உலுக்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam