வவுனியாவில் 6 குளங்களில் விடப்பட்ட இரண்டு இலட்சத்து 35 ஆயிரம் இறால் குஞ்சுகள்
வவுனியா, ஆசிக்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள 06 குளங்களுக்கு 235,000 இறால் குஞ்சுகள் விடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறியளவிலான விவசாய, வணிக மீண்டெளல் திட்டத்தின் கீழ் இறால் குஞ்சுகள் விடும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வானது இன்று (17.02.2024) வவுனியா, கோமரசன்குளத்தில் நடைபெற்றுள்ளது.
ஐம்பதாயிரம் இறால் குஞ்சுகள்
இதன்போது கோமரசன்குளத்திலே ஐம்பதாயிரம் இறால் குஞ்சுகள் பிரதம விருந்தினர்களால் விடப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின் இணைப்பாளர் எஸ்.ஏச்.ஏ.அஸ்ரவ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட விவசாய பணிப்பாளர் ஈஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி.முகுந்தன், மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அற்புதச்சந்திரன், தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி யோ.நிசாந்தன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
