ஆசிரியர்களும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளார்களா? வெளியான முக்கிய தகவல்
அரச சேவையாளர்களை வழமைப்போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அது ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகள் அடுத்த திங்கட்கிழமை முதல் வழமையை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, அரச நிறுவனங்கள் நாளை மறுதினம் முதல் வழமைப்போன்று இயங்கவுள்ளன.
பாடசாலைகளை மீள திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்படாத நிலையில்,குறித்த சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனுமதிகள் வழங்கப்பட்டால் ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
