அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை: சுகாதார அமைச்சின் செயலாளர் தகவல்
இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் உட்பட 140 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மருந்துப் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகள் முடங்கியதுடன், நோயாளிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
பற்றாக்குறையாக உள்ள மருந்துகளுக்கு கொள்முதல் கட்டளைகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் பணம் செலுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

மருந்து இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கை
இந்நிலையில் புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் இந்தியக் கடன் வரியின் கீழ் கட்டளைச் செய்யப்பட்டு, அந்த 43 மருந்துகளும் இன்னும் பதினைந்து நாட்களில் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பற்றாக்குறையாக உள்ள எஞ்சிய மருந்துகளை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார செயலாளர் ஜனக சந்திரகுப்த இதனை
தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 22 மணி நேரம் முன்
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri