நாட்டில் முக்கிய பொருளொன்றுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு
செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளது.
இதன் காரணமாக தற்போது சகல பத்திரிக்கை தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டொலர் தட்டுப்பாடு மற்றும், உலகளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்கு பிரதான காரணம் என பத்திரிக்கை தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு டன் காகிதம் 450 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது, 800 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது, கடந்த மாதத்தை விட இம்மாதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக பத்திரிக்கை தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri