மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு:அம்பாறையில் ஆரம்பமானது வரிசையுகம்(Photos)
மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்ற தகவல்- நெருக்கடியான
எரிபொருள் நிலையங்களில் மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
முண்டியடிக்கும் செயற்பாட்டில் மக்கள்
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று(18.01.2023) இரவு முதல் பெட்ரோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததை காண முடிந்தது.
கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடீரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு
இதனால் மக்கள் கடந்த காலங்களில் எரிபொருள் நிலையத்தை சூழ ஒன்று கூடியவாறு நிற்பதையும் அதிகளவான வாகனங்கள் எரிபொருள் நிலையங்களை நாடி செல்வதையும் காண முடிகின்றது.
மேலும் நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை சாய்ந்தமருது மருதமுனை பகுதிகளில் பெட்ரோல் இன்மையினால் பொதுமக்கள் திரும்பி செல்வதுடன் டீசல் எரிபொருள் சீராக இப்பகுதிகளில் விநியோகிக்கப்படுகின்றது.