அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை
அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையானது, பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறைகளைத் தொடர்ந்து பாதித்து வருவதால், இலங்கை பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பற்றாக்குறை காரணமாக, நாள்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் தவிக்கவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புற்றுநோய் சிகிச்சையில்
இந்த பிரச்சினை பல மாதங்களாக மோசமடைந்து வருகிறது மருத்துவமனைகள் நோயாளிகளை வெளியில் இருந்து மருந்துகளை வாங்குமாறு கேட்டுக்கொள்கின்றன.
எனினும் குறித்த மருந்துகள் கையிருப்பில் இல்லை அல்லது அவர்கள் வாங்கக்கூடிய விலையில் இல்லை என்று நோயாளிகள் கூறுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோய்க்கான இன்சுலின், நான்கு மாதங்களுக்கும் மேலாக பல இடங்களில் கையிருப்பில் இல்லை.
அதேபோன்று புற்றுநோய் சிகிச்சையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஃபில்கிராஸ்டிம் மற்றும் சிஸ்பிளாட்டின் ஊசிகள் மிகவும் பற்றாக்குறையாக உள்ளன.
இந்தநிலையில் அரசாங்கம் இந்த விடயத்தில் கலவையான பதிலை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ள ஆங்கில ஊடகம் ஒன்று, பற்றாக்குறையாக உள்ள மருந்துகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
· Fentanyl (Intravenous -IV pain killers used in operations)
· Insulin (10ml)
· IV paracetamol
· IV ondansetron & Maxalone (for vomiting)
· Filgrastim injection – Priced around Rs. 8,000
· Cisplatin injection – Priced around Rs. 5,000
· Diltiazem (30mg/60mg)
· Phenobarbitone (30mg)
· Chlorpromazine (50mg)
· Imipramine (25mg)
· Atropine eye drops
· Sodium Valproate syrup
· Oxybutynin (2.5mg)
· Oseltamivir (30mg/45mg/75mg)
· Jeevani (ORS)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




