சந்தையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு!
சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையானது பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் ஏற்படுத்தப்படுவதாகவும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கட்டுப்பாட்டு விலை
அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் நடத்திய ஊடக சந்திப்பின் போது, அதன் தலைவர் டட்லி சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்கப்படவில்லை எனவும், இது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் மேற்கொள்ளப்படும் பாரிய மோசடி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எதிர்காலத்தில் நாட்டு அரிசி, கட்டுப்பாட்டு விலையில் விற்கப்படும் எனவும், இது அரசாங்கத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும் பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
