மீண்டும் பால்மாவுக்கு தட்டுப்பாடு : தீர்வு தொடர்பில் தெரிவித்த அமைச்சர்
டொலர் பற்றாக்குறை காரணமாக பால்மாவை விடவும், ஏனைய அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் சந்தையில் தற்போது பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய போது அமைச்சர், அதற்கு தங்களிடம் தீர்வு இல்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாட்டில் பல இடங்களில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் பால்மா விற்பனைக்கு இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.