முல்லைத்தீவில் தீக்கிரையான வர்த்தக நிலையங்கள்: நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் முன் (16) இன்று ஏற்பட்ட தீ விபத்தில் தீக்கிரையான வர்த்தக நிலையங்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்பகுதியில் உள்ள உணவகமொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், குறித்த உணவகமும், உணவகத்தின் அருகே இருந்த வர்த்தக நிலையமும் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
அத்துடன், அருகே இருந்த மேலும் சில வர்த்தக நிலையங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
உரிய நடவடிக்கை
இந்நிலையில் குறித்த பகுதிக்கு உடனடியாக நேரடியாகச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனஞ் செலுத்தியதுடன், பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் உடன் கலந்துரையாடியதுடன், நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவொன்று இல்லாமையினாலேயே கூடுதல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவொன்றை ஏற்படுத்துவது தொடர்பாக தம்மால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri