இங்கிலாந்து இளவரசரின் அரண்மனைக்கு முன்பாக துப்பாக்கிச்சூடு!மர்ம நபரொருவர் பலி
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள கென்சிங்டன் நகரில் இளவரசரின் அரண்மனைக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இளவரசர் வில்லியம் தனது மனைவி கதே மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வரும் அரண்மனைக்கு அருகில் பல நாடுகளின் தூதரகங்களும் அமைந்துள்ள நிலையில், துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கென்சிங்டன் நகருக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள வங்கிக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து பின்னர் காரில் ஏறி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு பொது மக்கள் தகவல் வழங்கியுள்ளதுடன்,அரச குடும்பத்தின் அரண்மனைக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வங்கி கொள்ளையர் ஓட்டி வந்த காரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது அவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கி சூட்டினை மேற்கொள்ள முயற்சித்த நிலையில், சந்தேகநபரை பொலிஸார் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இளவரசரின் அரண்மனைக்கு அருகில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.





அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
