மாத்தறையில் துப்பாக்கிச்சூடு! சந்தேகநபர்களை கைது செய்ய தீவிர விசாரணை
புதிய இணைப்பு
மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் பல்பொருள் அங்காடி அருகே இன்று (21) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரிக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
காரில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 55 வயதுடைய மீன் வியாபாரி கொல்லப்பட்டார்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளன.
இரண்டாம் இணைப்பு
மாத்தறை - கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் 9 மி.மீ துப்பாக்கியால் துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
'டிலைட்' எனப்படும் 55 வயது மீன் வியாபாரி மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறப்பு விசாரணை ஆரம்பம்
இந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய பொலிஸ் பிரிவு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

முதலாம் இணைப்பு
மாத்தறை - கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (21) பிற்பகல் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது காயமடைந்த நபர் மாத்தறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரில் வந்த ஒரு குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 18 நிமிடங்கள் முன்
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan