எல்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு
எல்பிட்டிய ஓமன்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது, குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றை இலக்கு வைத்து நேற்றிரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் வீட்டின் ஜன்னல்களுக்கு சேதம் எற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி இவ்வாறு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதேசத்தில் போதைப் பொருள் தொடர்பில் தகவல்களை வழங்கிய காரணத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri