திருகோணமலையில் துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபர் ஒருவர் பலி
திருகோணமலையில் இன்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையில் உள்ள சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவர் பலி
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய தொழிலதிபர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரணத்துக்கான காரணம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படுகொலைச் சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
இக்கொலையின் பின்னணி மற்றும் குற்றவாளிகள் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
மேலதிக தகவல்- கியாஸ்
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan