கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு - ஒருவர் படுகாயம்
கனடா, ஸ்காபுரோவில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக ரொறன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்கம் வீதியின் மெக்னிகால் அவென்யூ பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் சம்பவம் இடம்பெற்ற நிலையில் பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதற்கமைய அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காயமடைந்த நிலையில் ஒருவர் மருத்துவனைக்கு அழைத்து வரப்பட்டதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். எப்படியிருப்பினும் இந்த துப்பாக்கி சம்பவத்திற்கு தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தால் 416-808-4200 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.