தேங்காய் திருடிய நபர் மீது துப்பாக்கிச்சூடு
குளியாபிட்டிய பிரதேசத்தில் தேங்காய் திருடிய நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அந்த நபர் காயமடைந்துள்ளார்.
கால்நடை வள அபிவிருத்தி சபைக்கு சொந்தமான தென்னந்தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் தேங்காய் திருடியுள்ளார்.
இவ்வாறு திருடும்போது குறித்த தோட்டத்தின் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸார்
தாக்குதலில் காயமடைந்த நபர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாம் தேங்காயை திருடிய போது பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காயமடைந்த நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டினால் குறித்த நபரின் கை மற்றும் இடுப்பு பகுதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தரை பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |