பிரித்தானியாவில் வீதியில் நடந்த கொடூரம்! ஒரே பகுதியில் மீட்கப்பட்ட மூன்று சடலங்கள்
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என கருதப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டிங்ஹாம் பகுதியில் இல்கெஸ்டன் வீதியின் அருகில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் மில்டன் தெரு பகுதியில், வாகனம் ஒன்று மூவர் மீது மோதிய விவகாரம் தெரியவந்துள்ளது.
சாலையில் நடந்த கொடூரம்

குறித்த பகுதிக்கு இன்று(13.06.2023) பகல் 4 மணியளவில் பொலிஸார் அழைக்கப்பட்ட போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் வாகனம் ஒன்று மோதிய சம்பவத்தில் தொடர்புடைய மூவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மக்தலா சாலையில் ஒருவரது சடலம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 31 வயது நபர் ஒருவரை கைது செய்த பொலிஸார், இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் என தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டத்தில் விசாரணை

கைது செய்யப்பட்டவருக்கு, ஒரே நேரத்தில் மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணை முதற்கட்டத்தில் இருப்பதால், என்ன நடந்தது என்பது தொடர்பில் தற்போது தகவல் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணையின் ஒருபகுதியான,Ilkeston Road, Milton Street, Magdala Road, Maples Street, Woodborough Road உள்ளிட்ட சில சாலைகள் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
You may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri