கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்த சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு
கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர் பல்வேறு பக்க விளைவுகளால் (பல உறுப்பு நோய்த்தொற்றுகள்) பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பக்கவிளைவுகள் கொண்ட 25 சிறுவர்களுக்கு கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று குழந்தை மருத்துவர் டொக்டர் தீபால் பெரேர(Deepal Perera) தெரிவித்தார்.
இந்த சிறுவர்கள் அனைவரும் கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்து பின்னர் வீட்டிற்கு சென்று பல்வேறு பக்க விளைவுகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த குழந்தைகளுக்கு மூளை, இதயம் மற்றும் சிறுநீரகத்தில் பல்வேறு கோளாறுகள், அதிகரித்த இதய துடிப்பு, நிமோனியா மற்றும் தொடர்ந்து காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதாகவும், இந்த சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் நிபுணர் கூறினார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam