இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் மீண்டும் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அடையாளம் காணப்படும் அனைத்து கோவிட் நோயாளிகளும் ஒமிக்ரோன் வகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் ஆபத்தான நோய் அல்ல என தவறான கருத்து உள்ளதாகவும் ஆபத்தான நிலைக்குள்ளான நோயாளிகளும் உள்ளனர். ஆபத்துக்குள்ளானவர்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் கோவிட் தொற்றினால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பிலேயே அதிகமாக அவதானம் செலுத்தப்படுகின்றது.
இலங்கையில் நூற்றுக்கு நூறு வீதமான மக்கள் இந்த நாட்களில் ஒமிக்ரோன் தொற்றினாலேயே பாதிக்கப்படுகின்றனர். ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் மீண்டும் ஒமிக்ரோன் தொற்றினாலேயே பாதிக்கப்பட கூடும்.
ஒமிக்ரோன் ஆபத்தான தொற்றல்ல என கூறப்படும் கருத்து முற்றிலும் தவறானது. மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அதிகமான தொற்றாளர்களை அவதானிக்க முடிகின்றது.
இதனால் தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.