இலங்கையில் சிக்கிய சைபர் குற்றவாளிகள் - பின்னணி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
காலி மற்றும் மாத்தறை பகுதிகளில் சைபர் குற்றங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மற்றும் நேபாள நாட்டவர்கள், சுற்றுலா விசா மூலம் நாட்டிற்குள் நுழைந்து கிரிக்கெட் சூதாட்டத்தை நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளிலேயே தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரைக் குறிவைத்தே இவர்கள் இலங்கையிலிருந்து இந்தச் சூதாட்டத்தை இயக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிரிக்கெட் சூதாட்டம்
இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் திட்டமிட்ட முறையில் இலங்கையிலிருந்து இந்தச் சூதாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இணையதளம் மூலமாகவே இந்தச் சூதாட்டம் நடைபெற்றுள்ளது.
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் பிரபலமான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் காலப்பகுதியில், இவ்வாறு குழுக்களாக சூதாட்டத்தை நடத்துவதற்காக இந்த குழுவினர் இலங்கைக்கு வருகை தருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்திய நாட்டவர்கள்
கடந்த 11ஆம் திகதி பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, 288 இந்திய மற்றும் நேபாள நாட்டவர்கள் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகள், கணினிகள் மற்றும் ஏனைய உபகரணங்களைச் சோதித்த போதே, அவர்கள் இலங்கையில் தங்கியிருந்து இந்தச் சூதாட்டத்தையே நடத்தியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 263 பேர் இந்திய நாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam