இந்தியாவில் 200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்: பின்னணியில் திரைப்பட தயாரிப்பாளர்
இந்தியாவின் டெல்லியில் 50 கிலோ எடையுள்ள 200 கோடி ரூபாய் பெறுமதி கொண்ட சூடோ பெட்ரைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் பல தகவல் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த போதைப்பொருளை கடத்தி வந்த 3 பேரிடம் அண்மையில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
தலைமறைவு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரே இந்த கடத்தல் குழுவின் மூளையாக செயற்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தலைமறைவாக உள்ள அவரை தேடும் பணியில் டெல்லி பொலிஸ் சிறப்பு பிரிவோடு, போதை பொருள் தடுப்பு பிரிவும் இணைந்து ஈடுபட்டுள்ளது.
கடந்த 3 வருடங்களில் கிட்டத்தட்ட 45 முறை போதைப்பொருள்களை சர்வதேச சந்தைகளுக்கு கடத்தியிருப்பதாகவும், அவற்றின் மதிப்பு 2 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் எனவும் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam