பாகிஸ்தானில் இலங்கையர் கொலை : மருத்துவ அறிக்கையில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் மரணத்தின் பின்னர் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகள் மூலம் அவர் கொல்லப்பட்டமை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் கொலை செய்யப்பட முன்னர் அவரின் தலைமீது பாரிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மேலும் அவரது உடலைத் தீயிட்டுக் கொளுத்துவதற்கு முன்னர் அவரது கைகால்களை முற்றாகச் சேதப்படுத்தியுள்ளனர் என பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும்,
அவரது தலையில் பல தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்றன எனவும் மூளைவரை அது சென்றதால் மரணம் நிகழ்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை கும்பல் அவரது கைகால்களை முற்றாக அடித்து நொருக்கி விட்டது எனப் பிரேத பரிசோதனை அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது திசுக்களில் 99 வீதமானவை எரிகாயம் மற்றும் காயங்களால் சேதமாகிவிட்டன. காலின் அடிப்பகுதி தவிர உடலின் அனைத்து பாகங்களும் எரிந்துவிட்டன என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி...
பாகிஸ்தானில் இலங்கையர் ஏன் கொல்லப்பட்டார்? வெளியாகியுள்ள தகவல்
பாகிஸ்தானில் இலங்கையரொருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம்! பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 100 பேர் கைது
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்!
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri