ஷிரந்தியை காப்பாற்ற சிங்கபூரில் இருந்து அவசரமாக வந்த மருத்துவ ஆவணம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்சவின் சிங்கப்பூர் மருத்துவ அறிக்கை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷிரந்தி தற்போதும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இன்றைய தினம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் சிங்கப்பூரிலும் ஷிரந்தி மருத்துவ பரிசோதனைக்கு முகங்கொடுத்திருந்ததுடன், அதன் அறிக்கைகள் தற்போது இலங்கைக்கு வந்துள்ளன.
இதய சத்திரசிகிச்சை
அதில் உடனடியாக மருத்துவச் சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே குடும்பத்தினரின் தகவலுக்கமைய, ஷிரந்தி ராஜபக்சவிற்கு திறந்த இதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டி வரும் என்றே கூறப்படுகின்றது.
எனினும், குடும்பத்தினர் அவ்வப்போது சென்று ஷிரந்தியைப் பார்வையிட்டு வருவதுடன், அவர் பாதுகாப்பின் கீழ் உள்ளதாக கூறப்படுகின்றது.
ஷிரந்தியை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பது குறித்தும், எப்போது, எவ்வாறு, எங்கு மேற்கொள்வது என்பது குறித்தும் வைத்தியர்களால் பின்னர் தீர்மானிக்கவுள்ளதாகக் குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வந்துள்ள அறிக்கைக்கு அமைய ஷிரந்திக்கு பிணை வழங்கப்படலாம் எனவும் ராஜபக்ச தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.