மகிந்த முன்னிலையில் ஷிரந்தி கைது - அம்பலமானது நாடகம்

Mahinda Rajapaksa Shiranthi Rajapaksa FCID - Financial Crimes Investigation Division
By Vethu Oct 07, 2026 09:53 AM GMT
Report

அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி  ராஜபக்ச கைது செய்யப்பட்டு  விசாரணைக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கிருலப்பனையில் அமைந்துள்ள அவரது வதிவிடத்தில் வைத்து இன்று(07.10.2026 காலை ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக இரண்டு தடவைகள் பதவி வகித்த மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில், முன்னாள் முதற்பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.


மகிந்த முன்னிலையில் கைது

சிரிலிய சவிய கணக்குத் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை ஒன்றுக்கு அமையவே ஷிரந்தி ராஜபக்ச இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மகிந்த முன்னிலையில் ஷிரந்தி கைது - அம்பலமானது நாடகம் | Shiranthis Fraud Revealed

இதேவேளை, கைது செய்யப்பட்டு அழைத்து செல்லும் போது கண்ணில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டமைக்கு சான்றாக அதனை மறைக்கும் வகையில் பிளாஸ்டர் ஒட்டியிருந்தமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக்கொள்ள செல்வதாக கூறி, ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்நிலையில் ஊழல் மோசடி விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர் அவசரமாக சிங்கப்பூர் சென்றிருந்தாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஷிரந்தியின் நாடகம்

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் ஷிரந்தி ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியிருந்தார்.

மகிந்த முன்னிலையில் ஷிரந்தி கைது - அம்பலமானது நாடகம் | Shiranthis Fraud Revealed

கண்களில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதற்கான எந்தவொரு சான்றுகளும் அற்று சாதாரண நிலையிலேயே அவர் இலங்கையை வந்தடைந்தார்.   இதன்போது கண்ணில் எந்தவொரு அடையாளமோ, கட்டுக்களோ இருக்கவில்லை.

எனினும் இன்றையதினம் கண்ணில்  கட்டுக்களுடன் ஷிரந்தி ராஜபக்சவை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

இதன்மூலம் ஷிரந்தியின் அரசியல் நாடகம் அம்பலமாகி உள்ளதுடன், பொய்யான முறையில் சிங்கப்பூர் சென்றிருந்தார் என்பது உறுதியாகி உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை ஷிரந்தி ராஜபக்ச அழைத்து செல்லப்பட்ட நிலையில், மகிந்த ராஜபக்சவும் மனைவிக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கைது செய்யப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலை

கைது செய்யப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலை

இலங்கை வரலாற்றில் கைது செய்யப்பட்ட முதலாவது முதற்பெண்மணி ஷிரந்தி

இலங்கை வரலாற்றில் கைது செய்யப்பட்ட முதலாவது முதற்பெண்மணி ஷிரந்தி

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US