சிரந்தி ராஜபக்ச என்ற மேரி லூக்ஸ் விக்ரமசிங்க பெயரில் பல கோடி மோசடி அம்பலம்!
மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலத்தில் அவருக்கு கொழும்பில் தற்காலிகமாக தங்குவதற்காக வழங்கிய வீட்டை அவர் பலாத்காரமாக கைப்பற்றி மேரி லூக்ஸ் விக்ரமசிங்க என்ற பெண்ணின் பெயரில் பதிவு செய்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிறிலால் பிரியந்த தனக்கு இரகசியமாக கிடைத்த ஆவணங்களை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.அந்த செவ்வியில் அவர் தெரிவித்த பல முக்கிய கருத்துக்கள்
ரணில் மஹிந்தவுக்கு வழங்கிய வீடு
2002 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு கொழும்பில் வசிப்பதற்கு வீடொன்று இல்லாததால் பிரதமராக இருந்த ரணிலிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அச்சந்தர்ப்பத்தில் அரச பங்களாக்கள் இல்லாததால் ரணிலுக்கு நெருக்கமான கோடிஷ்ர வர்த்தகரான பிரபாத் ரவீந்தர நாணயக்காரவிடம் இது தொடர்பில் தெரிவித்து உங்களிடம் ஒரு வீடு இருந்தால் மஹிந்தவுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு தருமாறு கேட்டுள்ளார்.
பிரபாத் ரவீந்தர நாணயக்கார சீனாவின் சிஎம்சி நிறுவனத்தின் இலங்கையின் பிரதிநிதியாராவார். அப்போது தனக்கு சொந்தமான கொழும்பு-05 இல் உள்ள வீட்டை வழங்கியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச தனது மனைவி சிரந்தி ராஜபக்சவுடன் நீண்ட காலமாக இருந்துள்ளார்.
2005 இல் நடந்த சம்பவம்
2005 ஆம் ஆண்டு மஹிந்த ஜனாதிபதியான பின்னர் இவர் குறித்த வீட்டை கையளிக்குமாறு கேட்டுள்ளார்.ஆனால் பல காரணங்களை சுட்டிக் காட்டி தட்டிக்களித்து வந்துள்ளார்.
பின்னர் 2010 ஆம் ஆண்டும் மஹிந்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது குறித்த வீட்டு சொந்தகாரருக்கு தனது அரசியல் பலத்தில் அதிகாரம் செய்துள்ளார்.
அப்போது அந்த வீட்டை அவர் ஏதோ ஒரு விதத்தில் கைப்பற்றி விடுவாரோ என்ற பயத்தில் 08 இராணுவ வீரர்களை 24 மணிநேர பாதுகாப்பு போட்டிருந்தார் மஹிந்த.
இந்து பாதுகாப்பு அநுர குமாரதிசாநாயக்க ஜனாதிபதியாக பதிவியேற்கும் வரை வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கு இராணுவ பாதுகாப்பு
2013 ஏப்பிரல் 05 ஆம் திகதி தனது அதிகாரத்தில் தனது மனையான சிரந்த ராஜபக்சவின் பெயருக்கு எழுதியுள்ளார்.
ஆனால் பதிவு செய்த ஆவணங்களில மேரி லூக்ஸ் விக்ரமசிங்க என்ற பெயரில் தான் பதிவாகியுள்ளது. மேரி லூக்ஸ் விக்ரமசிங்க என்பது சிரந்தி ராஜபக்சவின் உண்மையான பெயராகும்.
சிரந்தியின் உண்மையாக பெயர் அறியாதவர்கள் இருப்பதால் அது தொடர்பில் பலருக்கு தெரிவதில்லை.

இரு மாடிகளை கொண்ட இந்த வீடு காழும்பு -5 டொரின்டன் மாவத்தையில் 260ஃ12 என்ற விலாசத்தில் அமைந்துள்ளது.
குறித்த வீட்டின் முகவரியிலேயே யோசித்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் ஸ்போட் என்ற நிறுவனமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.