மகிந்தவோடு FCIDக்கு வந்த ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் வெளியேறினார்
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் கொழும்பு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு ஷிரந்தி ராஜபக்ச வருகைத் தந்துள்ளார்.
மேலும், ராஜபக்ச ஆதரவாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பெருமளவானவர்கள் விசாரணைப் பிரிவிற்கு முன்னால் ஒன்று திரண்டுள்ளனர்.
ஒன்று திரண்டுள்ள ராஜபக்ச விசுவாசிகள்
ஷிரந்தி ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இவ்வாறு பெருமளவான ராஜபக்ச ஆதரவாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஒன்று திரண்டுள்ளனர்.
நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக ஷிரந்தி ராஜபக்ச இன்று விசாரணைக்காக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த 27ஆம் திகதி விசாரணைக்கு முன்னிலையாகுமாறு ஷிரந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், தான் அன்றையதினம் முன்னிலையாக முடியாதென்றும், இரண்டு வார கால அவகாசம் கேட்டும் ஷிரந்தி ராஜபக்ச கோரிக்கை முன்வைத்திருந்தார்.
அதற்கமைய இன்றையதினம் அவர் மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அவர் விசாரணைக்காக முன்னிலையாவதற்கு முன்னர் அங்கு பெருந்திரளான சட்டத்தரணிகள் ஒன்று கூடியுள்ளனர். இதனால், ஒருவேளை ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.











ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரை கைது செய்ய உத்தரவு..! சர்வதேச பிடியாணையில் அதிரடியாக களமிறங்கும் அதிகாரிகள்
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam