ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்
போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிகிடம் நிதி உதவி பெற்றதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர், சில ஆண்டுகளுக்கு முன்பு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்களை, பரீட்சைக்கு முன்பாக கசியவிட்ட நபர் என்பது தெரியவந்துள்ளது.
இந்தத் தனியார் வகுப்பு ஆசிரியர் தற்போது டுபாயில் வசித்து வருவதாக பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த ஆசிரியரை கைது செய்வதற்காக இன்டர்போல் அமைப்பின் உதவி பெறப்படவுள்ளது.
சிவப்பு அறிவிப்பு
அத்துடன், அவருக்கு எதிராகச் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள ஷிரான் பாசிக் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ள அவரது மகனையும் மனைவியை பொலிஸார் விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு! நாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய பகிரங்க உண்மை