அமெரிக்காவால் 800 இராணுவ வீரர்களுடன் கடலில் மூழ்கிய கப்பல்: வெளிவரும் புதிய தகவல் - உலக செய்திகளின் தொகுப்பு
அவுஸ்திரேலிய இராணுவத்தினர் 864 பேர்களுடன் கடலில் மூழ்கிய ஜப்பான் வணிக கப்பல் ஒன்று 84 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் அறிவித்துள்ளார்.
எஸ்எஸ் மான்டிவீடியோ மரு (SS Montevideo Maru ) என்ற குறித்த கப்பலானது தற்போது தென் சீன கடலில் நிபுணர்கள் தரப்பால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
1942 ஜூலை மாதம் ஜப்பானுக்கு சொந்தமாக அந்த வணிக கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மூழ்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மிக மோசமான கடல் விபத்து என குறிப்பிடப்படும் இந்த சம்பவத்தின் பின்னணியில் அமெரிக்கா இருந்துள்ளது.
பப்புவா நியூ கினியாவில் இருந்து சீனாவின் ஹைனான் துறைமுகத்திற்கு பயணப்பட்ட அந்த கப்பலை அமெரிக்கா நீர்மூழ்கி கப்பல் மூலமாக தாக்கி மூழ்கடித்துள்ளது.
தற்போது இந்த கப்பலானது 84 ஆண்டுகளுக்கு பிறகு லூசன் தீவின் வடமேற்கில் கண்டுபிடிக்கப்பட்டது, மட்டுமின்றி கடல் மட்டத்தில் இருந்து 13,123 அடி ஆழத்தில் அந்த கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கப்பலில் அவுஸ்திரேலிய இராணுவ வீரர்கள், போர் கைதிகள், பல நாட்டு பொதுமக்கள் உட்பட 1,000 ஆண்களுக்கு மேல் பயணப்பட்டிருப்பார்கள் என்றே நம்பப்படுகிறது.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam