காலநிலை மாற்றம் தொடர்பில் ஆராயவுள்ள ஷி யான் 6 சீன கப்பல்
ஷி யான் 6 சீன சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் எரிபொருள் உள்ளிட்ட தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளதாகவும் இதற்கான அனுமதியையே அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த கப்பலானது இந்து சமுத்திரத்தை அண்டிய பகுதிகளில் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட ஆய்வுகள்
மேலும், நாரா நிறுவனத்தோடு இணைந்து ஒருவார காலத்துக்கு மாத்திரம் இந்து சமுத்திர நீர் தொடர்பில் விசேட ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருப்பதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன சமுத்திரவியல் ஆய்வு கப்பல் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததோடு இக்கப்பலானது நாளை மறுதினம் வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவே இக்கப்பல் இலங்கைக்கு வர அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam
