பதவி விலகினார் ஷேக் ஹசீனா
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களையடுத்து பதவி விலகிய அவர், நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹசீனாவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் வலுப்பெற்றுள்ளன.
இராணுவம் கெடு
மேலும் அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மாணவர்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக தமது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு இராணுவம் கெடு விதித்திருந்தது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக வெடித்த இந்த புரட்சியில் 200ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனால் பங்களாதேஷ் முழுவதும் அசாதாரண பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து வெளிநாட்டவர் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர்.
மீண்டும் மாணவர்கள் புரட்சி
இந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் மாணவர்கள் புரட்சி வெடித்தது. மாணவர்களின் இடைவிடாத போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்ததால் பாதுகாப்பு படையினர் இந்த கிளர்ச்சியை ஒடுக்க முயன்றனர்.
இதில் மேலும் 100ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 300ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை பெறும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்த நிலையில் பங்களாதேஷ் இராணுவ அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
உடனடியாக பதவி விலக வேண்டும்
மேலும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் இராணுவம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், ஷேக் ஹசீனா பதவி விலக 45 நிமிடம் அந்நாட்டு இராணுவம் கெடு விதித்தது.
பங்களாதேஷ் ஊடக தகவல்களின்படி, இந்தியாவுக்கு தான் ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் தப்பியிருப்பதாகவும் மேற்கு வங்க மாநிலத்தில் இருவரும் தஞ்சமடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
