சவேந்திர சில்வா என்னிடம் ஆலோசனை பெற்றார்! பொன்சேகா பரபரப்பு தகவல் - செய்திகளின் தொகுப்பு
மக்கள் போராட்டத்தின் போது இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா தன்னிடம் ஆலோசனை பெற்றது உண்மைதான் எனவும், அப்போது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம் என தான் அறிவுறுத்தல் வழங்கினேன் இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், நாடாளுமன்ற வளாகம் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சவேந்திர சில்வா என்னுடன் கதைத்தார். போராட்டத்துடன் எனக்கு தொடர்பு இருந்தது.
நான் நாடாளுமன்ற உறுப்பினரும்கூட. எனவே, நாடாளுமன்ற உறுப்பினருடன் கதைப்பதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு தடை இல்லை. அத்துடன், நான் இராணுவ பிரதானியாக இருந்தவன்.
அந்தவகையில் கதைத்திருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri