விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கடவுச்சீட்டைப் பெறுவதற்காக தவறான தனிப்பட்ட தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தாக்கல் செய்த மேல்முறையீட்டை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (08) தள்ளுபடி செய்துள்ளது.
தீர்ப்பை வழங்கிய கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன, மேல்முறையீட்டாளருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன்
2022 ஆம் ஆண்டில், கொழும்பு நீதவான் நீதிமன்றம் சசி வீரவன்சவை குற்றவாளி எனக் கண்டறிந்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ. 100,000 அபராதமும் விதித்தது.

அந்தத் தண்டனைகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.