தகுதியற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதே குற்றம்: சோயப் அக்தர் காட்டம்
டி20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 61 ஓட்டங்களால் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ண மேடையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 8-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
முதலில் துடுப்பாடிய இந்தியா, இஷான் கிஷனின் அதிரடி ஆட்டம், சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபேயின் பங்களிப்புடன் 20 ஓவர்களில் 175 ஓட்டங்களைக் குவித்தன.
இந்தியா - பாகிஸ்தான் அணி
இதன்படி, 176 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பாடிய பாகிஸ்தான், இந்தியப் பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் 114 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் படுதோல்வி குறித்துப் பேசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையையும் (PCB) வீரர்களையும் கடுமையாக சாடியுள்ளார்.
விமர்சித்து பேசிய அக்தர்
ஒன்றும் தெரியாத ஒருவர் (மொஹ்சின் நக்வி) PCB தலைவராக இருந்தால் அணி எப்படி உருப்படும்? தகுதியற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதே மிகப்பெரிய குற்றம் என அவர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஷாஹீன் அப்ரிடி 125 கி.மீ வேகத்தில் பந்துவீசுகிறார், இது நவீன கிரிக்கெட்டுக்கு சரி வராது. ஒரு போட்டியைக்கூட வென்று தர முடியாத ஒருவரை (பாபர் அசாம்) நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆக்கிவிட்டீர்கள். முன்பு மைதானத்தில் இந்தியாவுடன் சரிசமமாகப் போராடினோம். ஆனால் இன்று இந்தியாவை வெல்வது பற்றி எங்களால் கனவிலும் நினைக்க முடியாது என அக்தர் வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.