துறைமுக அதிகார சபை கையப்படுத்தி வைத்துள்ள காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும்!
திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசனால் பாதீட்டு விவாதத்தில் 2025 / 03/ 07 ஆம் நாளான இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரை.
2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மீதான விவாதத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் தொடர்பாக எனது கருத்துகளை இந்த அவையில் எடுத்துரைக்க விழைகின்றேன்.
எடுத்துக்காட்டாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் ஐந்து கிலோமீட்டர் நீளமான இலங்கைத்துறை முகத்துவாரம் வீதி, இரண்டு கிலோமீட்டர் நீளமான பூநகர் - பூமரத்தடிச் சேனை D1 வாய்க்கால் வீதி, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் மூன்று கிலோமீட்டர் நீளமான கிளிவெட்டி கிரான்குளம் - ஆதீயம்மன் கேணி வீதி, நான்கு கிலோமீட்டர் நீளமான மல்லிகைத்தீவு - கங்குவேலி பிரதான வீதி, இரண்டு கிலோமீட்டர் நீளமான மேன்கமம் - மல்லிகைத்தீவு வீதி பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் இருநூறு மீற்றர் நீளமான பொது மருத்துவ மனை வீதி ( பழைய Rifel வீதி ) மற்றும் இருநூறு மீற்றர் நீளமான ஈஸ்வரபுரம் உள்ளக வீதி, தம்பலகமம் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் ஒன்றரை கிலோமீட்டர் நீளமான பாலம் போட்டாறு பாடசாலை வீதி, ஒன்றரை கிலோமீட்டர் நீளமான சிப்பித்திடல் பிரதான வீதி, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் 48 கி.மீ நீளமான திருகோணமலை - புல்மோட்டை வீதி முதலியன மிகவும் மோசமான நிலையில் பயன்படுத்துவதற்கு முடியாது காணப்படுகின்றன.
இதனை மறுசீரமைக்க ஆவன செய்ய வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன். திருகோணமலை மாவட்டத்தில் வீதிகள் மட்டும் அன்றி பாலங்களும் பழுதடைந்துள்ளன. இவை நீண்ட காலத்துக்கு முன்னர் கட்டப்பட்டவையாகும்.
எடுத்துக்காட்டாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் கட்டைபறிச்சான் பாலம் ( கருப்பு பாலம் ) மற்றும் இறால் பாலம் என்பன முழுமையாகச் சேதமடைந்து காணப்படுகின்றன.
இவற்றைச் சீரமைக்கா விட்டால் உயிர்ச் சேதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றைப் புதிதாக அமைக்க ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 51 நிமிடங்கள் முன்

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவி சீரியல் புகழ் மான்யா ஆனந்த்... எந்த தொலைக்காட்சி தொடர்? Cineulagam

Optical illusion: பந்திற்குள் மறைந்திருக்கும் "5" களில் மறைந்துள்ள "3" ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
